பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அ - 1 - 4 அறன் வலியுறுத்தல் - 4

எனவே உலகியல் மக்கள்நலக் கொள்கைகள் அனைத்திற்கும்

பொதுமைநலவுணர்வும், அதன் வழிப்பட்ட கருத்தும் செயல்களுமே காரணமாகி நிற்கின்றனவென்றும், அவற்றை ஒவ்வொருவரும் எண்ணத்தானும், உரையானும், செயலானும் கடைப்பிடித்தொழுகுதல் வேண்டும் என்பதையே இவ்வதிகாரத்தாலும், இதைத் தொடர்ந்துவரும் அறம், பொருள், இன்பத்துப் பால்களானும், பல்வேறு அகவகம், அகப்புறம், புறம் புறப்புறம் என்னும் கோணங்களில் வலியுறுத்தியும் தெளிவுறுத்தியும் நூல் செய்தார் என்க.

'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படுஉம் தோற்றம் போல’

- புறம்: 31

- என்று பரிமேலழகர் எடுத்துக் காட்டிய தமிழியல் மரபுச் செய்யுளும் இதையே வலியுறுத்துவதன்றி, அவர் கூறிய இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மைக் கூறுபாடுகள் சுற்றி வளைத்தேனும் எங்கும் இந் நூலுள் கூறப்பெறவில்லையென்பது தெளிவாம் என்க. 'அறம்' என்பது மென்மையான மனவுணர்வின் நுண்ணியல் கூறுபாடு. மனத்தை அடிப்படையாகக் கொண்ட இவ்வுணர்வு அறிவுணர்வைத் தழுவி வெளிப்பட்டுச் செயலாக மலர்கிறது. எனவே இது மாந்தவியலுக்குப் பொருந்திய வகையில் ஓர் உலக இயங்கியலாக உள்ளதே அன்றி, ஒரு கற்பனைக் கோட்பாடாக மதத்தையோ, சமயத்தையோ அடிப்படையாகக் கொண்டு இயங்கவில்லை என்பதை இந்நூல் முழுவதும் ஆசிரியர் உறுதிப்படுத்தியுள்ளார் என்க.

இந்நடைமுறை இயங்கியல் அறிவியல் தழுவிய மாந்த நலனை, இங்குக் காட்சியாய், கருதுதலாய், செயல்களாய்த் தோன்றி இயங்கும் உயிரியக்க நிலைக்குப் பொருத்திப் பார்க்காமல், மதவியல் கற்பனையான மறுமைக்கும், துறக்கத்திற்கும் (மோட்சத்திற்கும் விண்ணுலகத்திற்கும்) பொருத்திப் பார்ப்பது அறியாமை மட்டுமன்று, ஏமாற்றும் ஆகும் என்க. -

"எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப விடும், சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப்பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும் வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம்" - என்னும் பாவாணர் உரையும் பயனில் உரையாம்.

இனி, தமிழியலில் 'அறம்' என்பதற்கும், ஆரியவியலில் தர்மம்' என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடுகள் உள்ளன.

தமிழர் அறம் வேறு; ஆரிய தர்மம் வேறு. தமிழர் அறம் மாந்த உயிரினத்திற்கே பொதுவானது; வேறுபாடுகளோ, மாறுபாடுகளோ கொள்ளாதது. -