பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

148


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 148

இக்காலத்திற் கேற்குமே யன்றி ஆசிரியர் கருத்தாகாது" என்று பொத்தாம் பொதுவில் கூறியிருப்பதும் மதவழிப்பட்ட மயக்கக் கூற்றே என்று மறுக்க அவர்களிருவரும் அறம் இன்னதெனத் தெள்ளிதின் உணராது, ஆரிய வியல், தர்மக் கோட்பாட்டையே தமிழியல் 'அறமாகக் கொண்டதாலும், கண்டதாலும் வந்த மருளால் விளைந்த விளைவாம் அஃதென்றும் தெளிக என்னை: தத்தம் வாழ்வியல் நோக்கத்துடன் செய்யப்பெறும் எந்தச் செயலும் அல்லது தொழிலும் அறமாகாது என்பது தெளிக. பொது நலம்கருதிச் செய்வதே அறம். சிவிகை ஊர்வதும், பொறுப்பதும் எந்தப் பொதுநலம் கருதிய செயலும் அன்று. ஆகையான், ஆங்கு அறமும் இல்லை; அறத்தின் பயனுமில்லை என்று உறுதியின் உரைக்க இவை பற்றி மேலெழும் அனைத்து ஐயங்களுக்கும் ஆன விளக்கங்களும் விரிவும் இதன் மிகு விரிவாகிய நிறைவுரையுள் கூறப்பெறும் என்று

உணர்க.

O

க.அ. வீழ்நாள் படா.அமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை செய்யத் தவறும் நாள்இடையீடு இல்லாமல், நல்லனவாகிய (பொதுநல அறச் செயல்களை ஒருவன் தொடர்ந்து செய்து வருவானானால், அஃது, அவன் எஞ்சிய வாழ்வுக் காலத்தில் செய்ய வேண்டிய வழியிலுள்ள பள்ளங்களை மூடி அடைவு நிறைவு செய்து கொள்ள உதவும் கல் போன்றதாகும். (அந்நிலையில் அவன் செல்லும் வழி சமநிலைப்பட்டு, அவன்வழிச் செலவை எளிதாக்கும்

சில விளக்கக் குறிப்புகள் : z : : : ? .

1. மக்கள்நலம் கருதும் பொதுவுணர்வுடன் கூடிய அறத்தொண்டில் இடையீடின்றித் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்