பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

178


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 178

அஃதவ்வாறெனின், புறத்தாற்றில் போய்ப் பெறுவ தெவன் - என்று ஏன் அவர் சொல்லுதல் வேண்டும்? * : * *

அஃது ஏனெனில், துறவறம் சிறந்தது எனக் கருதினாலும், ஒருவன் அதைவிரும்பின் அது முதுமையிற் கொள்ள வேண்டுவது என்பது அவர் கருத்து. தமிழியலின் கருத்தாகவும் மரபாகவும் அது தெரிகிறது.

காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. - - - -- தொல், 138 - என்று தொல்காப்பியமும் குறிப்பதினும் பிறமரபு.நூல்களானும்

மேலும், நூல்கள். குறிப்பதும், திருவள்ளுவர் கூறுவதும், இல்லிலிருந்து மேற்கொள்ளும் இல்லறத்துறவறமா, அல்லது கான்சென்று உறையும். ஆரியவியலில் கூறப்பெறும் சந்நியாசத் துறவறமா என்பது துறவு அதிகாரத்தும், துறவறவியல் முன்னுரையிலும் நன்கு ஆராயப்பெறும்

இல்தொருபுறம் நிற்க, இக் குறளின்கண் குறிப்பிடப்பெறும் கருத்து என்னெனின், இளமையிலேயே இல்லற நெறியை அஃதாவது அக அறத்தைத் துறந்து விட்டு அஃது ஆற்றாமலேயே, புறத்தாறாகத் துறவறம் மேற்கொள்ளும் போக்கை இது கடிந்து கூறியதாகும் என்க. என்னை? - - ஆற்றின் என்ற சொல்லால், காலத்தால் ஆற்றுதல் என்னும் பொருளுக்கும் இடனுண்டு. . . . . .” *- : : - - - - - - - - - - ------------

அறத்தாறு,அஃதாவது இல்லறம் ஆற்றுதற்குக் காலம் உண்டு. அஃதாவது இளமைக்காலம். இக்காலத்தில் அகத்தாறு, - பிறவிப் பயனையும் இல்லற விளைவையும் (அஃதாவது உலகம் உயர்த்த மக்கட் பேற்றையும், சமநிலைக் குமுகாயம் சமைக்கும் விருந்தோம்பலையும், ஒப்புரவறிதல், ஈகை முதலியவற்றையும், அதனால் புகழ் பெறுதலையும் துறந்துவிட்டுப் புறத்தறமாகிய துறவறம் மேற்கொள்வது தேவையில்லை.ன்னல் வேண்டி இது