பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

222


அதே போல் ஏழெயில், ஏழிசை, ஏழ்மணி, ஏழில் - என்றும் வருகின்றன. ஆனால் ஏழ் பிறவியோ, எழு பிறவியோ என்ன பொருளிலும் எங்கும் குறிக்கப் பெறவில்லை.

ஆனால் திருக்குறளிலேயே 'எழு' என்பது 'ஏழு' என்று எண்ணுப் பொருளில் 1259, 1278, ஆகிய இரண்டிடங்களிலும் ஏழு நாள்களைக் குறிக்க வந்துள்ளது.

நூலாசிரியரின் இந்தப் பயன்படுத்தத்தைக் கொண்டே, ஒரு வேளை, எழு பிறப்பு என்பதையும், ஏழு பிறவி என்று நூலாசிரியர் கருதியதாக உரையாசிரியர் பலர் கொண்டிருக்கலாம். ஆனால், நூலாசிரியர் அவ்வாறு கருதவில்லை என்பது முற்காட்டிய கரணியங்களால் தேற்றமாகிறது.

1.ஏ)

அடுத்து, பாவாணர் எழு என்பதை எழு என்னும் எண்ணுப் பெயராகக் கொண்டு, அதை ஒரு நிறைவெண் என்றும், நீண்ட காலத்தைக்குறிப்பது, என்றும் கூறியிருப்பதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. ஆனாலும் அதுபோலவே மற்ற எண்களும் குறிக்கப்பெறுகின்றன என்னும் உண்மையையும், நாம் காணுதல் வேண்டும்.

1ஐ

அவ்வாறு, நூல்களுள் பரவலாக இரண்டு முதல் பத்து வரையிலும், தமிழ்ச் சொல் வழக்காகவும், வடசொல் (சமஸ்கிருத வழக்காகவும் வந்துள்ளவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டுக்குச் சில பல கீழே திருதும்.

இரண்டு :

தமிழ் வழக்கு : இருகண் புறக் கண், அகக்கண், இருகாழி இரண்டு கொட்டைக்காய், இருசுடர், இருதிணை, இருநிதி, இருபிறப்பு இருபொருள், இருபோகம், இரு மரபு, இருமலம், இரு முதுகுரவர், இருமை, இருவினை - முதலியன. -

வடமொழி வழக்கு : துவாயுதம், துவிஜன், துவைதம் முதலியன. துவி - இரண்டு)

மூன்று : -

தமிழ் வழக்கு : முக்கடுகம், முக்கண்ணன், முக்கனி, முக்காலம், முக்காழி முக்கொட்டைக் காய், முக்குடை, முக்குணம், முக்குலம், முக்கூடல், முக்கோணம், முப்பால், முப்பழம், முப்பகை, முந்நீர், முந்நூல், முப்பலை, முப்புரி, முப்புரம் முப்பொறி, மும்மணி, மும்மதம், மும்மலம், மும்மாரி,