பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9 இரவில் வந்துவிட்ட நல்ல புகழ்மிக்க விருந்தினர் ஒருவர்க்கு ஒர் இல்லக் கிழத்தி உணவு அணியம் செய்த பாங்கு இது: 'எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு கிளர் இழை அரிவை நெய்துழந்து அட்ட விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றி சிறுநுண் பல்வியர் பொறித்த குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே! நற்: 41-6.10.

(எல்லி - இரவு அட்ட சமைக்க) விருந்தினர்க்கு விருந்துணாச்சமைக்கின்ற கூடுதல் பிணக்கிடையிலும், விருந்தினர் வந்ததைத் தொல்லையாகக் கருதாமலிருந்ததுடன், மேலும் விருந்தினர் வருவதை மிகழ்வுடன் விரும்பும் தலைவி ஒருத்தியின் மனப்பாங்கு இது: 'புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அம்துகில் தலையினில் துடையினள், நப்புலந்து அட்டிலோளோ அம்மா அரிவை எமக்கே வருகதில் விருந்தே!

நற்: 120-6-10,

ஏழைமையராக இருந்தாலும் விருந்து வருவதை விரும்பவும், வந்தவிடத்து அவர்களைத் தம்மால் இயன்ற அளவு ஒம்பவும் நாலடியார் நல்லுரை பகர்கிறது: -

இம்மி யரிசித் துணையேனும் வைகலும் தம்மில் இயைவ கொடுத்து உண்மின்

- நாலடி 94 வறுமை கருதியோ, வேறு இயலாமை கருதியோ, விருந்தினரை வரவேற்காத அல்லது விருந்துக்கு ஒளிந்து கொள்ளும் இல்லற வாழ்வைப் பண்பாடற்ற வாழ்க்கை என்று அற்றையர் இகழ்ந்தனர். -

ஒள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை' -

црib. 266-II ஆற்றா வறுமையிலும் தன் இல்லம் தேடி வந்த புதிய விருந்தினரை, ஏழைப் பாணன் பாடிப் பிழைப்பவன் ஒருவன், முதல் நாள் தன்னிடமிருந்த பழைய இரும்பு வாளை அடகுவைத்துப் பேணியதையும், இரண்டாம்