பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 6{}

வாழ்கிறது என்னும் மெய்ப்பொருள் உண்மையும் இதனுள் விளக்கப் பெறுவது காண்க - எழுத்தெல்லாம் அகர முதல என்றதால், உலகில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் அகரமே முதலாக உடையதும் பெறப்பட்டது. இவ்வுண்மை கூறுவதற்கு, நூலாசிரியர்க்கு, அவர் காலத்துப் பலமொழிகளைப் பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தெரிய வருகிறது. கழக நூல்களிலிருந்து அவர் காலத்து, சீனம், கிரேக்கம் முதலிய அயன்மொழிகளும், பிராகிருதம், பாலி, சமசுகிருதம் முதலிய வடமொழிகளும் வழங்கியனவாக அறியப்பெறுகின்றது. எனவே, ஆசிரியரும் அவை பற்றி அறிந்திருக்கலாகும். அவற்றுளெல்லாம் அகரமே எழுத்து முதலாக உள்ளது அறிக.

- 'அ'கரம் பல்வேறுபட்ட உலக மொழிகளிலும் ஒலி நிலையில் ஒன்றுபட்டிருப்பினும், ஒளி நிலையில் அஃதாவது எழுத்துவரி வடிவ நிலையில் வேறு வேறு வகையாக உள்ளதால், அவற்றிலும், அவற்றைப் பேசும் மக்களிடையிலும், இறைவன் எனும் உணர்வு பொருந்தியிருப்பினும், அவன் பெயரும் உருவமும் வேறு வேறு பட்டிருப்பதை உணர்த்தினார் என்க.

எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம்,

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை, -- - தொல். 102. என்றுரைக்கும். அஃதாவது ஒர் எழுத்தை ஒலிக்கும் எண்ணம் தோன்றியவுடனே, அந்த ஒலி தோன்றும் இடத்திலுள்ள அணுக்களெல்லாம் அந்த ஒலியை எழுப்புவதற்கு ஒன்று திரளும். இஃது அகநிகழ்வு. இனி, ஒன்று திரண்ட ஒலியணுக்கள் எழுத்தொலியாக வருவது புற நிகழ்ச்சி. அஃதாவது, முதலாவது காரணம்; பின்னது கருமம்.

இந்தக் கருமநிலை வேறுபாடுடையது. அவரவர் குரல் முயற்சியின் வெளிப்பாடு. ஆகையால் அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி வேறுபாடுகள் நிகழும். எனவே, ஒரே எழுத்தொலி ஒவ்வொருவரின் குரல் வழியாகவும், வெவ்வேறு காலநிலை,