பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 145

இதற்கு முன்வரை ஏறிவராத அளவுக்கு மீன்களும் ஏறி வந்து கொண்டிருக்கின்றன. எல்லாத் திசைகளிலும் உள்ள பறவைகளும் அவற்றை உண்ண ஓடிவருகின்றன. நூறாறு கண்ணிகளைப் பெற்ற பேறாகக் கருதிக் குத்திக்கொண்டு நூவனும் நானும் காத்திருந்தோம். உனக்கு இனிப் பயன் படும்படியான சூளை மருந்தாகிலும், பிறரைப் பேசா மலிருக்கச் செய்யும் வாடைப் பொடியாகிலும், கிடைக்கும் பறவைகளிலே பாதிப் பங்காகிலும், ஒரு கொக்காகிலும், நரிக்கொம்பாகிலும் தருகின்றேன். வம்புகள் பேசிக்கொண்டு இங்கே சத்தம் போடாதே அப்பனே! இராகம் - கல்யாணி தாளம் - ஆதி பல்லவி கெம்பாறடையே பொறு பொறு கெம்பா றடையே!

அனுபல்லவி கெம்பாறடையே! நம்பர் குற்றாலர்

கிருபைப் புறவில் பறவை படுக்கையில் வம்பாக வந்தவன் சத்தத்தைக் கேட்டல்லோ

வந்த குருவி கலைந்தோடிப் போகுது (கெம்)

சரணங்கள் ஏறாத மீன்களும் ஏறி வருகுது

எத்திசைப்பட்ட குருகும் வருகுது நூறாறு கண்ணியைப் பேறாகக் குத்தியே

நூவனும் நானும் இருந்தோம் உனக்கினிப் பேறான சூளை மருந்தா கிலும்பிறர்

பேசாமல் வாடைப் பொடியா கிலும்,அரைக் கூறா கிலும்ஒரு கொக்கா கிலும்நரிக்

கொம்பா கிலுந்தாரேன் வம்புகள் பேசியே (கெம்) (வம்பாக வந்த - புதிதாக வந்த என்றுமாம். நூறாறு கண்ணி - பல கண்ணிகள். சூளை மருந்து - வேசையரை வசியப்படுத்தும் வசிய மருந்து. வாடைப்பொடி - மயக்கும் மணப்பொடி)