பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - • . 7

பொருள்களை எல்லாம் திருமுதுகுன்றத்து மணி முத்தாற் றிலே போட்டுவிட்டுப் பின் அவற்றைத் திருவாரூர் கமலாலயக் குளத்திலே வந்து எடுத்துக் கொண்டவர் சுந்தரமூர்த்திப் பெருமான். இந்நூல் இனிது நிறைவேற அம்மூவர்களும் என்னைத் துணை நின்று காத்து உதவுவார்களாக தலையிலே ஆறிருக்க மாமிக் காகத்

தாங்குகடல் ஏழழைத்த திருக்குற் றாலர் சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்

செழித்தகுற வஞ்சிநாடகத்தைப் பாட அலையிலே மலைமிதக்க ஏறி னானும்

அத்தியிலே பூவைஅந்நாள் அழைப்பித் தானும் கலையிலே கிடைத்தபொருள் ஆற்றிற் போட்டுக் கனகுளத்தில் எடுத்தானும் காப்ப தாமே. (இந்தப் பாடலுள் நான்கு பழைய வரலாற்றுக் கதைகள் பேசப்படுகின்றன. அவை: 1. சிவபெருமான் ஏழுகடல் அழைத்தது; 2. அப்பர் கடலிலே கல்மிதக்க ஏறிக் கரை சேர்ந்தது; 3. திருஞான சம்பந்தர் எலும்பினின்றும் பூம்பாவையை உயிர்ப்பித்தது; 4. சுந்தரர் ஆற்றிலே பொருளைப் போட்டுக் குளத்திலே எடுத்தது ஆகியவை. இவ்வரலாறுகளுள் முதலதைத் திருவிளையாடற் புராணத்தும் பிற மூன்றையும் பெரிய புராணத்தும் காண்க. சிலை - மலை. தடித்த தடம் - பருத்து அகன்ற, செழித்த குறவஞ்சிசெழுமையாக அமைந்த குறவஞ்சி, கருத்துச் செழுமையும் சொற் செழுமையும் ஆம். அத்தி - எலும்பு. பூவை - பெண், பூம்பாவை. கலை - தமிழ் பாடும் கலை. அற்புதங்கள் இயற்றியவர்கள் அவர்கள்; அவர்களுடைய காப்பின்கீழ்ச் செயற்படும்போது எவ்வித இடையூறும் நேராது (இந்நூல் நிறைவெய்தும் என்பது கருத்து)

6. தமிழுரைத்த முனியைப் பாடுவோம்! வாதவூரான் அடிகளைப் பேணுவோம்! சிவபெருமான், பிறப்பிறப்பு அற்று என்றும் நிலைத்

திருக்கும் நித்தியப் பரம்பொருளாவார். அவர், அடியவர் மீதுள்ள கருணைப் பெருக்கினால் திரிகூட நாட்டிடத்தே