பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

சுசீலன், சுபத்தி ஆகிய மூவர்களுக்கும் அளித்தவர் அவர். அவர்மீது மையல் கொண்ட என் ஒருத்தியின் காமத்தீயை இப்படி அவிக்காமலிருக்கின்றாரே? பருத்த மலையான மகாமேருவையே அந்நாள் தன் கைப் பிடியினுள் இணக்கிக் கொண்டவர் அவர் என் கொங்கைகளான பருவ மலைகளைத் தம் கையால் இணக்காமல் இன்னமும் இருக்கின்றாரே?

தம்முடைய ஐந்து தலைகளுக்குள்ளாக ஆறாகிய கங்கையையும் தலைமீது கொண்டுள்ளவர் அவர்; ஆனால், எனது மனத்திலே எழுந்திருக்கும் அஞ்சுதலுக்கு ஒர் ஆறுதலைத் தந்தருளாமலிருக்கின்றாரே! நஞ்சைத் தாமுண்டு அமுதத்தைத் தேவராகிய பிறருக்கு வழங்கிய கருணை யாளரான அவர் என் வாள் போன்ற விழிகளிலே படர்ந்துள்ள நோயாகிய இந்நஞ்சையும் தாம் பருகி எனக்கு அமுதமாகிய இன்பத்தைத் தந்தனரில்லையே?

தேவர் தலைவனாகிய இந்திரனின் சாபத்தைத் தீர்த்து அவனுக்கு அருளியவர் அவர், மாஞ்சோலைக் குயிலான சின்னத்தையுடைய தலைவனான மன்மதன் என்மீதிலிட்ட மையலாகிய இந்தச் சாபத்தைத் தீர்க்கின்றவரில்லையே? எல்லோரும் போற்றுகின்ற திருக்குற்றாலர்தாம் சகல பேர்க்கும் இரங்குவார். ஆனாலும், எனக்கு மட்டும் இரங்காதிருக் கின்றனரே? பெண்ணே! (என் செய்வேனோ?) இராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி கண்ணிகள் புரத்து நெருப்பை மூவர்க் கவித்தவர்

மையல் கொண்டஎன் ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார் பருத்த மலையைக் கையில் இணக்கினார்

கொங்கை யான . பருவமலையைக் கையில் இணக்கிலார் 1 அஞ்சு தலைக்குள் ஆறு தலைவைத்தார்

எனது மனதில் அஞ்சு தலைக்கோர் ஆறு தலைவையார்