பக்கம்:திருக்கோலம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருக்கோலம்

அகிலாண்டம் ஈன்ற அன்னேயே பின்னேயும் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே:

என்று இந்தத் தெய்விக முரண்பாட்டைச் சொல்வி வியக் கிருர் தாயுமானவர்.

அம்பிகை மேனேக்கும் இமயாசல அரசனுக்கும் மக ளாகத் திருவவதாரம் செய்தாள். அன்னே வயிற்றில் பிறக்க வில்லே, ஒரு தாமரை மலரில் சிறு பெண் குழந்தையாக எழுந்தருளியிருந்தாள். தன் விருப்பப்படி உருவம் கொள்ளும் பேரருள் உடையவள் அன்னே. ஆகவே, அவள் பிறந்தாள் என்று சொல்வது பிழை. அவள் மலேக்கு 拉巴莎6仔碎5 அவதரித்தாள். ஆலுைம் மேலெழுந்த வாரியாகப் பார்க் கும்போது, தாய் தகப்பனுக்கு மகளாகத் தோற்றியவள் என்று நினைக்கும்படி மலேமகள் என்ற திருநாமம் இருக்கிறது. இது வம்பாகத் தோன்றுகிறது. -

அன்னையின் இயல்புகளையெல்லாம் ஆராய்ந்து, அவற் றுக்கெல்லாம் பொருத்தமோ காரணமோ கண்டு பிடித்து அறிவது நம்மால் இயலாத காரியம். மூன்று செய்திகளே நாம் பார்த்தோம்; இன்னும் எத்தனையோ உண்டு. அவள் உருவமுடையவள்;. அருவாயிருப்பவள்’ என்று நூல்கள் கூறு கின்றன. அதிலும் முரண்பாடு இருக்கிறது. அவள் எல்லா வற்றையும் பேசுகிறவள்; பேச்சுக் கடந்த தனிமோன நில்

அவள் நிலை என்றும் கூறுவார் உண்டு. இப்படி உள்ள பல இயல்புகள் நம்முடைய அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவை. அவற்றைத் தேடி நாடி ஆராய்ந்து தெளியலாம் என்று நாம் விரும்பில்ை அது நம்மால் ஆகாத காரியம், அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது; மிகையான செயல்;

செய்ய வேண்டாதது.

நாடி விரும்புவதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/156&oldid=578095" இலிருந்து மீள்விக்கப்பட்டது