பக்கம்:திருக்கோலம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருக்கோலம்

பேரழகை எந்த ஓவியகுல்ை எழுத முடியும்? அவள் எழுதரிய திருமேனியை உடையவள். -

அம்பிகை வெவ்வேறு வர்ணமுள்ள திருமேனிகளே உடையவளாகக் காட்சி தருவாள். சியாமளாம்பிகையாக எழுந்தருளும்போது அவள் திருமேனி சியாமநிறம் அல்லது பச்சை நிறம் பொருந்தியதாக இருக்கும். அந்தக் கோலத்தை மகாகவியாகிய காளிதாசர் சியாமளா தண்டகம்’ என்ற நூலில் பாராட்டிப் பாடியிருக்கிருர்.

ச்யாமளா என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. இதயகமலமாகிய அநாகதத்தில் எழுந்தருளி யிருக்கும் ராகினி என்ற யோகினியின் திருமேனி சியாமள வர்ணமுடையது. அந்த வடிவத்தில் அம்பிகையே எழுந் தருளியிருக்கிருள். இவ்வாறு எழுதரிய திருமேனியையுடைய சியாமசுந்தரியை எண்ணுகிருர் இந்தப் பக்தர்.

எழுதரிய சாமள மேனி,

அன்ன அபிராமி எல்லாக் கலைகளுக்கும் தலைவி. சதுஷ் ஷஷ்டி கலாமயி’ என்றும், கலாவதி என்றும் (236, 827) அம்பிகைக்குரியனவாக உள்ள திருநாமங்கள் இந்த உண்மை யைப் புலப்படுத்துகின்றன. மயில் தன்னுடைய கலாபத் தைப் பரப்பி அழகுபெற நடிப்பதைப்போல அம்பிகை எல்லாக் கல்களையும் தன்னிடமிருந்து புறப்படவிட்டு நலம் செய்கிருள். ஆகையால் அவளை அடுத்தபடி,

சகலகலா மயில்தன்னை

என்கிறர் இந்த அன்பர். முன்பும், வருணச் சங்கல செங் கைச் சகல கலாமயில்’ (21) என்று இவரே பாடியுள்ளார். கலா என்பதற்குக் கலை என்றும் மயில்கலாபம் என்றும் பொருள்கள் உண்டு 'கலாமயிற் கூத்தயர் குளிர் புன்ம் மொய்த்திட்ட சாரல்’ (மீட்ைசியம்மை பிள்ளேத்தமிழ்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/178&oldid=578117" இலிருந்து மீள்விக்கப்பட்டது