பக்கம்:திருக்கோலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் கழன்ற இன்பம் 每每。

மனம்மட்டும் வேலை செய்கிறது. அதுபோல ஜாக்கிரா வஸ்தையில் இந்திரியங்கள் தொழிற்படாமல் இருக்கும் நிலை வந்தால் தியானம் கைகூடும். அதை ஜாக்கிரத்தில் ஸ்வப்னம் என்று சொல்வார்கள். நாம் மனத்தில் எந்த உருவத்தை அடிக்கடி தியானித்துப் பழகுகிருேமோ அதில் மனம் லயித்துவிட வேண்டும். .

மனம் எப்போதும் சுழன்றுகொண்டே இருப்பது; ஒரு கணத்தில் பல பொருள்களே நினைப்பது. அம்பிகையின் வடிவத்தை நினைக்கும்போது திடீரென்று ஒரு மலேயின்மேல் ஏறி நிற்கும். அங்காவது நிற்கிறதா? உடனே ஏதோ ஒரு தோட்டத்தில் போய்ப் பூப்பறிக்கும் அடுத்த கணத்தில் சினிமாக் கொட்டகையில் உட்கார்ந்துகொள்ளும். அதை ஒருமுகப்படுத்துவதற்கு மிகவும் கடுமையான பழக்கம் வேண்டும். .. .

ஒடிப்போகும் குழந்தையை அம்மா இழுத்து இழுத்து வந்து சோற்றை ஊட்டுவதுபோல, மனத்தை இழுத்து இழுத்து அம்பிகையின் திருவுருவத் தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். . . . . .

இதற்கு உபகாரமாக இருப்பவை, அம்பிகையின் திருவுருவ வருணக்காயைச் சொல்லும் பாடல்கள். பாட் டைச் சொல்லும்போது அதில் சொல்லப்பெறும் அங்கங் এ*&াr மனத்தில் ஒவ்வொன்றக அமைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் மந்திரத்தை ஜபம் செய்வதற்கு முன் அதற்குரிய தியான சுலோகம் ஒன்றைச் சொல்வது வழக்கம். அந்தத் தியான சுலோகம் ஜபத்திற்குரிய தெய்வத்தின் திருவுருவை விளக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்தச் சுலோகத்தில் உள்ள வடிவத்தை மனத்தில் எழுதிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். ; : « .

இந்தத் தியான யோகத்தால், மனம் கண்டபடி திரியாமல் ஒரு வட்டத்துக்குள் வளைய வரும், மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/65&oldid=578004" இலிருந்து மீள்விக்கப்பட்டது