பக்கம்:திருக்கோலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு அறுப்பவள் 75.

அம்பிகை செந்நிறம் உடையவள்; அவள் பூணும் உடை, அணி யாவும் சிவப்பாக இருக்கும். 'ஸர்வாருன’’ (87) என்று லலிதா சகசிர நாமம் கூறும். •

ஒல்கு செம்பட்டு உடையாளே

என்று அந்தச் செம்பட்டாடையை நினைவுறுத்துகிரு.ர். *அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் (37), சின்னஞ் சிறிய மருங்கினிற் சாத்திய செய்யபட்டும்?? (58) என்று முன்னும் சொல்லியிருக்கிரு.ர். செம்பட்டுக் கட்டும் நுசுப்பின் திரு” என்று திருப்புகழிலும் வருகிறது.

சிவந்த பட்டைச் சொன்னவுடனே மற்ருெரு சிவந்த, பொருள் நினைவுக்கு வருகிறது. அம்பிகை பல வகையான கோலங்களைக் கொள்பவள். சில சமயங்களில் பூதங்களுக் குத் தலைவியாக நிற்கும்போது சிவபெருமானப் போலச் சிவந்த சடையை உடையவளாகத் தோன்றுவாள். அங்கே சந்திரனை அணிந்திருப்பாள்; செஞ்சடையில் வெள்ளைப் பிறை பளிச்சென்று தோன்றும். -

ஒளிர் மதிச் செஞ்சடையாளே,

சாரு சந்த்ர கலாதரா (243) என்ற திருநாமம் உடையவள் அன்னே. தனிக் கண் விளங்கும் நுகற்பிறை மேலோர், மிகைப்பிறை கதுப்பிற் சூடி என்று ஆசிரிய மாலே என்ற நூல் இந்தச் செய்தியைக் கூறுகிறது. பனிமா மதியின், குழவித் திருமுடிக் கோமள யாமளேக் கொம்பு’’ (71) என்று முன்பு இவ்வாசிரியரே பாடியுள்ளார்.

அம்பிகை மதி புனைந்த சடாபாரம் உடையவள் என் பதை, சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவகள யுண்கண் பவளவாண் முகத்தி (சிலப்பதிகாரம், 28: 1-2).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/85&oldid=578024" இலிருந்து மீள்விக்கப்பட்டது