பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

می 32.52- திருக்கோவையார் உரைநடை தனன்’’ என்று தோழி தலைவியை நடுங்க வைத்துப் பார்த்தாள். குறிப்பு:- க. நடுங்க நாட்டம் என்னும் இவ் அதிகாரம் 1. கடுங்க நாட்டம் என்ற 1. துறையைக்கொண்டு முடிகின்றது. கo. மடல் திறம் "மடல் திறம்’ என்பது நடுங்க நாடவும், பெரு. நாணினள் ஆதலின் தலைமகள் தன்குறை சொல்ல மாட்டாது நிற்ப, இனி இவள் இறந்துபடவும் கூடு மென உட்கொண்டு தலைமகனுடன் சொல்லாடத் தொடங்கா நின்ற தோழி தானும் பெரு நாணினள் ஆதலின் தலைமகன் பின்னும் குறையுற வேண்டி நிற்ப, அந்நிலையில் தலைமகன் இந்நாளெல்லாம் என் குறை நின்னுல் முடியும் என்று நின்னை வந்து இரந்தேன்; இது நின்னல் முடியாமையின் யான் மடலூர்ந்தாயினும் இக் குறை முடித்துக் கொள்வேன்' எனத் தோழியிடம் கூறுதல். 1. ஆற்ருது உரைத்தல் (73. பொருளா என) அங்ங்னம் நடுங்கப் பார்த்த தோழி தலைமகன் பின்னும் குறையுற வேண்டி வாளா நிற்ப, தலைமகன் அவ் இருவரிடம் சென்று நின்று நீவிர் அருளாமை யால் என் உயிர் அழிகின்றது; இதனை அறிமின்' என்று. தனது ஆற்ருமை மிகுதியைக் கூறினன். 2. உலகின்மேல் வைத்து உரைத்தல் (74. காய்சினவேல்) அங்ங்னம் தனது ஆற்ருமையை எடுத்துக் கூறிய தலைமகன் மகளிர் தமது வேல் போலும் கண்ணுகிய வலையை வீசினபோது அவ் வலைப்படுதலால் தமது உள்ளமாகிய மீனை இழந்தவர்கள் ஈசனுடைய திருநீற் றையும், எருக்கம் பூவையும் அணிந்து ஒரு கிழியை (படத்தை)க் கையிற் பிடித்துப் பாய்ந்து செல்லும் புரவி s