பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்கோவையார் ஒளிதெறிக் கட்டுரை VII 3. அரசு (தலைவர்) தில்லைத் திருச்சிற்றம்பலத்து அரசு எல்லார்க்கும் அரசு. அவர் எவர்க்கும் முன்னும் அரசு. 4. அரியவர் உணர்ந்தாராலும் உணரப் படாத அரியர். எவர்க்கும் அரியர், எனக்கு எளியர் பிறர்க்கு அரியர். யார்க்கும் அறிவதற்கு அரியர். தன்கண் புகுவார்க்குப் பின் போதாவு (மீண்டும் போம் தன்மை) அரியவன். 5. அருளுதல், கருணைபுரிதல் விடத்திற்கு அஞ்சிக் கலங்கின தேவர்கள் பணியக் கருணை புரிந்தார் பெருமான். மல உடலை க்ேகித் திருமால் முதலான தேவர்களுக்கு அப்பால் செல்லும் பேற்றைத் தன் அன்பர் ஆயினருக்குத் தருபவர் பெருமான். 6. அழகர் அழகிய முக்கண்ணை உடைய பெருமான் தமது காதில் குழைகள் விளங்கும் எழிலே உடையவர். 7. அழிவில்லாதவர் - விண்ணும் மண்ணும் மடங்க, மலைகள் மறைய, ச்ே வேண்னம் பரந்து வரும் ஊழிக் காலத்தும் அழியாது கிங்பர் பெருமான். 8. அளவில்லாதவர் ஒர் அளவுக்கு அடங்காதவர் பெருமான். 9. ஆட்கொள்ளுதல் உள்ளும் உருகி உருவம் சிலிர்ப்பப் பெருமான் ஆபி. கோள்ளுவர். 10. இணையில்லாதவர் தமக்கு இனேயில்லாதவர் இறைவர்.