பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்கோவையார்.ஒளிநெறிக் கட்டுரை மூன்ருவது கண் நெற்றியில் தனிக் கண். 5. . கண்டம் : (களம், கழுத்து) பிரானுடைய கண்டம் மேகம் போன்ற்து. பிரானுடைய கண்டத்தில் உருத்திராக்கமணி விளங்கும். அவருண்டவிடம் அவர் கழுத்தில் அழகிய நீலமணி போல் விளங்கும். பிரானின் கண்டத்தினுடைய கிறம் காவிமலர், குவ8ள மலர், நீலமணி, மேகம் இவைகளே ஒக்கும். வானில் மலரும் பனி முகிலின் மாண்பைக் கொண்டது. பிரானின் மிடறு (கழுத்து). 6. கரம் : (கை) பிரான் மலர்க் கையில் அரவு, மான், மழு மூன்றும் வினங்கும். 7 செவி : (காது) அழகிய குழை விளங்கும் காதினர் பிரான். 8. சென்னி : (த.லே) பெரு ரோம் கங்கை பிரான் சென்னியில் விளங்கும். 9. திருவடி - -(كالك (I ) இருவர் (அரி, அயன்) அறியா அடி. தேவரும் அறி யாத அம்பலத்தில் ஆடும் பிரானுடைய அடித் தாமரை. (II) கழல் o மலர் போன்றது. ஒலிக்கின்ற கழலனியை உடையது; - ஆனந்த வெள்ளத்தில் ஆடுவது இமையோர் இன்றஞ் வது ; அடியார் கூட்டம் வணங்ாவது ; அழகு விளங்கி.