பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை அணிதில்லை, இறைதில்லை, எழில் தில்லை, ஒளிர்தில்லை. கடல் தில்லை, கடிமதில்தில்லை, கண்டர் தில்லை, குளிர்தில்லை, கூத்தன் தென்தில்லை, சூழ்பொழில் தில்லை, சேண் தில்லை, தண்தில்லை, தொல்லைத் தில்லை, பரன் தில்லை. பொழில் தில்லை, மதில் தில்லை, மல்லல் தில்லை, மலர்ப்பொழில் தில்லே, வடிவார்வயல் தில்லை, வண்தில்லை, வியன்தில்லை. தில்லைத் தொல்நகர், தில்லை மணிககர், தில்லை மாநகர், தில்லைவள நகர்-என்றெல்லாம் தில்லையின் சிறப்புக் கூறப் பட்டுள்ளது. இதன் விரிவை ஒளி நெறியிற் காணலாம். 2. பிற தலங்கள் 1. அம்பர் : (பேரளம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சுமார் 4 மைல்.) அம்பரின் தலத்தைச் சூழ்ந்து கடல் ஒலிக்கும். புலி யூர்ப் புனிதன் விற்றிருக்கும் தலம் அம்பர். 2. அரசம்பலம் : (பேரூர்) இத்தலம் கோயமுத்துாரி லிருந்து 3 மைல், மேலைச் சிதம்பரம் எனப்படும். - இத் தலத்தில் பிரான் நடனம் செய்வர். 3, இடைமருது : (திருவிடை மருதுார்) ஆம்பலத்துப் பெருமான் தங்கும் தலம் இது. - | 4. ஈங்கோய்மலை : (திரு விங்கநாத மலே என வழங்கும் இத்தலம் திரிசிராப்பள்ளிக்கு மேற்கே உள்ள குழித்தலை ஸ்டேஷனிலிருந்து 2-மைல்). அம்பலத்து அரன் சிறப்புடன் வீற்றிருக்கும். தலம். 5. ஏகம்பம் : (கச்சி ஏகம்பம் - காஞ்சிபுரம்) அம்பலத்தோன் தங்கும் தலம் இது. s 6. கடம்பை : (கடம்பூர்) சிதம்பரத்திற்கு 15 மைலில் உள்ள மன்னர்குடிக்கு 8 மைல்) #