பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஹமதியர் ஆக்ஷி

31



11-ம் அதிகாரம்.
மஹமதியர் ஆக்ஷி.

1662-ல் வங்காரு திருமலையினாலும் தஞ்சாவூராசனாலும் தூண்டப்பட்ட மஹாராஷ்ட்ரர்கள் ஸடாராவிலிருந்து ஆர்க்காட்டுக்கு வந்து நவாப்புடன் சண்டை செய்து அவனைக் கொன்றார்கள். நவாப்பின் குமாரன் மேலே சொன்ன ஸப்தார் அலி கான் அவர்களுக்கிணங்கிவர அவனிடம் கப்பம் பெற்றுச் சென்ற மஹாராஷ்ட்ரர் அவனுடைய வேண்டுகோளின் பேரில் திரும்பி வந்து திருச்சினாப்பள்ளியை வளைத்துக்கொண்டனர். சண்டா சாஹிப் தோற்கடிக்கப்பட்டு ஸடாராவிற்குக் கைதியாய்க் கொண்டுபோகப் பட்டான். திருச்சினாப்பள்ளிக்கு முரஹரிராவ், கவர்னராய் நியமிக்கப்பட்டு, வந்தான்.

1665-ல் நிஜாம் தெற்கே வந்து ஸப்தார் அலி கானை நீக்கி 1666-ல் ஆன்வாருட்டீனை நவாபாக நியமித்தான்.

1670-ல் நிஜாமிறந்ததால் அவன் குமாரன் நாஸர் ஜங்ஙும் பேரன் முஸபர் ஜங்ஙும் ஸிம்ஹாஸனத்திற்காக அடித்துக் கொண்டனர். அதே வருஷத்தில் ஸாஹு ஸடாராவில் இறந்ததால் சண்டா சாஹிப் சிறையினின்றுந் தப்பியோடி வந்தான். அவன் முஸபர் ஜங்ஙுடன் சேர்ந்து ஆன்வாருட்டீனை ஆம்பூரில் நடந்த சண்டையில் கொன்று தன்னையே நவாப்பாக்கிக் கொண்டான். ஆன்வாருட்டீன் குமாரன் மஹமடாலி திருச்சினாப்பள்ளிக்கு ஓடி வந்து தன்னையே நவாப்பென்று சொல்லிக்கொண்டான்.

திருச்சினாப்பள்ளியில் மஹமதியர் ஸ்வல்பகாலம் ஆக்ஷி புரிந்ததில் தாங்கள் ஹிந்துக்களுக்கு மதவிரோதியர் என்பதைக் காட்டினர். ஹிந்துக்களை ரொம்பவும் கஷ்டப்