பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸால்ட் அண்ட் ஆப்காரி டிபார்ட்மெண்ட்.

47


லுள்ளது ஹெட் ஆபீஸ். இவைகள் கடிதப் போக்குவரத்து, மணியார்டர், இன்ஷ்யூரன்ஸ், வேலைகளைத் தவிர, ஸேவிங்ஸ் பாங்க் வேலையும் செய்கின்றன. கிராமத்துக்கு கிராமம் மெயில் தூக்கிக் கொண்டுபோக ரன்னர்கள் உண்டு. கனத்த பைகளைக் கொண்டுபோக வண்டிகள், மோட்டார்களும் உண்டு. ரயில் பாதை உள்ள இடங்களுக்கு மெயில் ரயில்வண்டியிலேயே போகும். தபாலாபீஸாரே தந்தி வேலையையும் பார்க்கின்றனர். தந்தி வேலை செய்யாத தபாலாபீஸ்கள் உள்ள இடங்களில் ரயில் ஸ்டேஷன் இருந்தால் ரயில்வே கம்பெனியார் தந்தி வேலை செய்கிறார்கள். தபாலாபீஸ் வேலையை மேல்விசாரணை செய்பவர் இன்ஸ்பெக்டர், ஸூப்பெரின்டெண்டண்ட், போஸ்ட்மாஸ்டர் - ஜெனரல், டைரெக்டர் - ஜெனரல் முதலியவர்கள். இந்த டிபார்ட்மெண்டு சென்னை கவர்ன்மெண்டாருக்குட்படாமல் Imperial Government-இன் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது.

Public Health Department :— கிராமங்களிலும் பட்டணங்களிலும் திருவிழாக்கள் நடக்கும்போதும் கூட்டங்கள் கூடும்போதும் ஜனங்களுள் வியாதிகள் பரவாமலிருக்கவும், வந்த வியாதிகளைத் தடுக்கவும், பொதுவாய் ஜனஸமூகத்தின் தேக சௌக்கியத்தைக் கவனித்துப் பார்க்கவும் ஏற்பட்டது Public Health Department. அம்மை குத்துகிறவர்கள், ஸப் அஸிஸ்டண்ட் ஸர்ஜன், அஸிஸ்டண்ட் ஸர்ஜன், ஜில்லா மெடிகல் ஆபீஸர், முதலியவர்கள் இவ்வேலையைச் செய்கின்றனர்.

salt and AbkariDepartment :— ஜனங்கள் திருட்டுத்தனமாய் உப்பு உண்டாக்காமலும் கள்ளு, சாராயம் முதவியவை உண்டாக்காமலும், கள்ளுக் கடைகளைப் பரிசோதனை செய்யவும் எற்பட்டவர் இந்த இலாக்காக்காரர். இதன்