உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 78 செல்லும் வழியில் திருக்கண்டியூர். திருப்பூந்துருத்தி. திருவாலம்பொழில் என்னும் தலங்கள் இருக்கின்றன. சம்பந்தர் செங்கண்மால் திகழ்தரு மலர்உறை திசைமுகன் தம்கையால் தொழுதுஎழத் தழல்உருவு ஆயினான்: கங்கைஆர் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி அம்கையால் தொழும்அவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே! அப்பர் தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் ஊனை விட்டுஉயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதும்காட் டுப்பள்ளி ஞான நாயக னைச்சென்று தண்ணுமே. 73. திருவாலம்பொழில் ஆத்மநாதர்-ஞானாம்பிகை. அப்பர் : 1. வழிபட்டநான் : 18-12-56, 2-1-88. தஞ்சை-திருவையாறு சாலையில் உள்ள திருக்கண்டியூரி னின்றும் மேற்கே இரண்டு கல் தொலைவிலுள்ள திருப்பூந்துருத்தியை யடைந்து, இத்தலத்திற்கு அங்கிருந்து ஒரு மைல் செல்லவேண்டும். அப்பர் பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை. எல்லாரும் தன்னையே இகழ அந்நாள் இடுபலிஎன்று அகம்திரியும் எம்பி ரானைச் சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.