பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருத்தலப்பயணம் 85. திருச்சத்திமுத்தம் சிவக்கொழுந்திசர்-பெரியநாயகி அப்பர் : 1. வழிபட்டநாள் : 9-1-57, 15-1-66. கும்பகோணத்திற்குத் தென்மேற்கே நாலுகல், தாராசுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே இரண்டு கல். திருப்பட்டீச்சரம் கோயிலிலிருந்து கால் மைல் அம்பிகை இறைவனுக்கு முத்தம் கொடுத்த தலம் என்ற பொருளில் சத்தி முத்தம் என வழங்குகிறது. தேவாரத்தில் சத்தி முற்றம் என்று சொல்லப் பெறுகின்றது. அப்பர் கருஉற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கருப்புவியில் தெருவில் புகுந்தேன் திகைத்தடி யேன்.தன் திகைப்புஒழிவி, உருவில் திகழும் உமையாள் கணவா! விடில்கெடுவேன். திருவில் பொலிசத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! 86. பட்டீச்சுரம் பட்டீசுரர்-பல்வளைநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 9-1-57, 15-1-66. கும்பகோணத்திற்குத் தென்மேற்கு 4 மைல். தாராசுரம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கு 2 மைல். திருச் சத்தி முத்தம் கோயிலுக்கும், திருப்பட்டீச்சுரம் கோயிலுக்கும் இடையே ஒரு வீதி தான்.