பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருத்தலப்பயணம் இரயில் நிலையத்தினின்றும் வடகிழக்கே 1% மைல். இதற்கு வடகிழக்கே 1% மைலில் வலம்புரம் என்னும் தலம் இருக்கின்றது. சம்பந்தர் நலச்சங்க வெண்குழையும் தோடும்பெய்தோர் நால்வேதம் சொலச்சங்கை இல்லாதிர்! சுடுகாடுஅல்லால் கருதாதிர்! குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயில்ஆலும் தலைச்சங்கைக் கோயிலே கோயில்ஆகத் தாழ்ந்திரே! 109. ஆக்கூர் தான்தோன்றி அப்பர்-வாள்நெடுங்கண்ணி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 31-1-57, 19-10-65. மாயூரம்-தரங்கம்பாடி இருப்புப் பாதையில் ஒர் இரயில் நிலையம், மாயூரம்-தரங்கம்பாடி நெடுஞ்சாலையில், மாயூரத்தினின்றும் 10 கல் அளவு. சிறிய மாடக் கோயில். கோவிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அறுபான்மும்மைநாயன்மார்களுள் ஒருவராகிய சிறப்புலியார் பிறந்த இடம். இத்தலத்துவேளாளர்களைத் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார். சம்பந்தர் வாள்.ஆர்கண் செம்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை தோள்.ஆகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேள்ஆளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்குஇருக்கும் தாள்.ஆளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.