பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருத்தலப்பயணம் 117. அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரீசுரர்-பூங்குழலம்மை சம்பந்தர் 1. வழிபட்டநாள் : 5-5-56, 24-8-65. பேரளம் இரயில் நிலையத்திற்கு அடுத்த பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கு 2 மைல். அம்பர் மாகாளத்திற்குக் கிழக்கே முக்கால் மைல் கோயிலுக்குப் பெருந்திருக் கோயில் என்று பெயர். இது கோச்செங்கட் சோழர் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்று. சோமாசிமாற நாயனார் வீடு பேறடைந்த தலம் இது. சம்பந்தர் மையகண் மலைமகள் பாக மாய் இருள் மையகதுஓர் கனல்எரி கனல ஆடுவர் ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர் செய்யகண் நிறைசெய்த கோயில் சேர்வரே. 118. அம்பர்மாகாளம் காளகண்டேசுரர்-பட்சநாயகி வழிபட்டநாள் : 5-5-56, 24-6-65 அம்பர்க் கோயிலிலிருந்து மேற்கே முக்கால் மைல். அம்பர் மாகாளத்திற்கும் அம்பருக்கும் இடையில் சோமாசிமாற நாயனார் யாகம் செய்த இடம் இருக்கின்றது.