பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருத்தலப்பயணம் சம்பந்தர் குழலார்சடையர் கொக்கின் இறகர் கோலநிறமத்தம் தழலார்மேனித் தவள நீற்றர் சரிகோவணக்கிளர் எழிலார்நாகம் புலியின் உடைமேல் இசைத்து விடையேறிக் கழலார்சிலம்பு புலம்ப வருவார் சித்திச்சரத்தாரே. சுந்தரர் ஊனார் உடைவெண் தலைஉண் பலிகொண்டு ஆனார் அடலேறு அமர்வான் இடமாம் வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்திச் சரமே. 129. அரிசிற்கரைப்புத்துளர் ( அழகார்புத்துனர் ) படிக்காசுஅளித்தஈசர்-அழகாம்பிகை சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநான் : 2-1-56, 25-6-65 கும்பகோணத்திற்குத் தென்கிழக்கு 4% கல் அளவு. புகழ்த்துணை நாயனார் வழிபட்டு வீடுபேறடைந்த தலம் இது. சம்பந்தர் நிலந்தண் நீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான் சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தான் ஊர் அலந்த அடியான் அற்றைக்கு அன்றோர் காசுஎய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்துரே. அப்பர் அருப்புப் போல்முலை யார் அல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டுநல் விட்டமாய்த் திருப்புத் துரனைச் சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே.