பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192. திருக்கோணமலை கோணேசுரர்-மாதுஉமையாள் சமீபத்தர் : 1. வழிபட்டதாள் : இலங்கைத் திவில் கிழக் கடற்கரையில் இத்தலம் இருக்கிறது. இரயில் நிலையம். இலங்கையிலுள்ள தேவாரத் தலங்கள் இரண்டினுள் இத்தலம் ஒன்று. சம்பந்தர் தாயினும் நல்ல தலைவர்என்று அடியார் தம்அடி போற்றிஇசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா மாண்டரினர் காண்பல வேடர். நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர். ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோனமா மலைஅமர்ந் தாரே. 193. திருக்கேதிச்சுரம் கேதிசுரர்-கெளரியம்பிகை சம்பந்தர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டதாள் : இலங்கைத் திவில் உள்ள இரண்டாவது தேவாரத்தலம். இலங்கை அரசாங்க இரயில் நிலையமான தலைமன்னாருக்குக் கிழக்கே5கல்தொலைவிலுள்ள பாலாவி என்ற ஆற்றின்கரை யில் மாதோட்டம் என்ற இடத்தில் இக் கோயில் இருக்கின்றது.