பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு #81 199. திருப்புத்துளர் திருத்தளிநாதர்-சிவகாமியம்மை சம்பந்தர் ! அப்பர் 1 வழிபட்டநாள் : 27-2-55, 24-8-85. காரைக்குடியிலிருந்து மேற்கே 13 கல் தொலைவு. மதுரையினின்றும் கிழக்கே 40 மைல். இங்கே வயிரவர் சந்நிதி மிக்க சிறப்புடையது. திருத்தளி என்னும் கோவிலுக்கு அணித்தேயுள்ள திருக்குளம் மிகப் பெரியது. சம்பத்தர் வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் தேனும் வண்டும் திண்ளக்கும் திருப்புத்துனர் ஊனம் இன்றி உறைவார் அவர்போலும் ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. அப்பர் மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கையோன்காண். நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளி னோன்காண்: பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு. தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் தூரில் திருத்தளியான் காண்கஅவன்என் சிந்தை யானே. சேக்கிழார் பற்றார்தம் புரங்கள்மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்துனர் பணிந்து போந்து புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம் பூவணத்தைப் புக்குஇறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் கற்றார்கள் தொழுதுஏத்தும் கானப் பேரும் கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகி னாரே.