பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிதாடு 183 இராமபிரான் உண்டாக்கி வணங்கிய கோயில். எனவே இராமேசுரம் என்னும்பெயர் பெற்றது. இராமன் தோற்றுவித்த இலிங்கமாதலின் இராமலிங்கம் என்றும், இராமனாதன் என்றும் இறைவனுக்குப் பெயர். கோயிலுக்குள்ளும் வெளியில் ஊருக்குள்ளும் ஏராளமான திர்த்தங்கள் இருக்கின்றன. இந்திய நாட்டின் தென் கோடியில் உள்ள தலம் ஆதவின் இதனை நாடுமுழுதும் போற்றுகின்றது. இராமனாதனை வணங்க வடநாட்டிலிருந்து மக்கன் எப்போதும் கூட்டங் கூட்டமாக வந்துகொண்டிருப்பதைக் காணலாம். காசிக்கு இலிங்கம் கொண்டுவரச்சென்ற அனுமன் வருமுன்னரேயே சிதையால் வைக்கப்பெற்று இராமன் வணங்கிய இலிங்கம் இராமலிங்கம். பின்னர் அனுமன் கொணர்ந்த இலிங்கத்தைப் பக்கத்தில் வைத்திருக்கிறது. அதற்குக் காசி விசுவனாதர் என்று பெயர். இந்நகரத்தில் பலரும் ஏராளமான சத்திரங்களும்,விடுதிகளும் கட்டியிருக்கின்றனர். நாட்டுக்கோட்டைநகரத்தாருக்குப்பெரிய சத்திரமிருக்கிறது. சேது மன்னர்கள் இக்கோயிலில் தொன்றுதொட்ட உரிமை உடையவர்கள். இராமனாதபுரத்தில் சமாதியான தாயுமான சுவாமிகள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் மலைவளர் காதலி அம்மைக்கு அருமையான பதிகம் பாடியுள்ளார். இத்தலத்தில் வடக்கே மூன்று மைலில் கந்தமாதன பருவதம் என்ற ஒரு குன்று இருக்கின்றது. இராமேசுரம் நாற்புறமும் கடல் சூழ்ந்த ஒரு தீவு. கந்தமாதன பருவதத்தின் உச்சியினின்றும் பார்த்தால் நான்கு புறத்துக்கடலும் தெரியும். இங்கிருந்துதான் அனுமன் பேருரு எடுத்துக் கடல் தாண்டி இலங்கை சென்றான் என்ப. இராமேசுரத்திலிருந்து தெற்கே 12 கல் அளவில் தனுக்கோடி என்று சொல்லப்பெறும் திர்த்தமாடும் இடம் இருந்து அண்மையில் தோன்றிய புயலால் அழித்துவிட்டது. இந்த இடத்துக்குச் சேது என்று பெயர். சேது என்றால் அணைக்கட்டு என்பது பொருள். இராமபிரான் இலங்கை செல்ல அணைகட்டியது இவ்விடத்திலேயே என்பர். சேது புராணம் என்ற பெயரால் நிரம்ப அழகிய தேசிகர் என்னும் புலவர் புராணம் பாடியுள்ளார்.