பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருத்தலப்பயணம் சம்பந்தர் வானினான் வேலினான் மால்வரை எடுத்ததிண் தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே. சுந்தரர் நாதனை. நாதமிகுத்து ஒசையது ஆனவனை. ஞான விளக்குஒளியாம் ஊன் உயி ரைப்பயிரை. மாதனை, மேதகுதன் பத்தர் மனத்துஇறையும் பற்று விடாதவனைக் குற்றம்இல் கொள்கையனைத் துாதனை. என்தனைஆன் தோழனை, நாயகனைத் தாழ்மக ரக்குழையும். தோடும் அணிந்ததிருக் காதனை நாயடியேன் எய்துவது என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேர்உறை காளையையே. 204. திருப்பூவணம் பூவனநாதர்-மின்னனையாள் சம்பந்தர் : 2. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 21-5-59, 26-8-65. மதுரை-மானாமதுரை இருப்புப் பாதையில் உள்ள இரயில் நிலையம். மதுரையினின்றும் தென்கிழக்கே 12 கல் அளவு. பாண்டிநாட்டிலுள்ளதேவாரம்பெற்றதலங்கள் பதினான்கில் இன்றைக்குமூவர் தேவாரமும் இருக்கும் தலம் இது ஒன்றுதான். மேலும், இத்தலம் திருவாசகத்திலும் பாராட்டப் பெறுகிறது. திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் இத்தலத்தைப் பெரிதும் போற்றிப் பாடியிருக்கின்றார். - திருவிளையாடல் புராணத்தில் இரசவாதம் செய்த படலம் இத்தலத்தைப்பற்றி எழுந்தது. இங்குப் பொன்னனையாள் என்று ஒரு நடனமாது இருந்தாள். அவளுக்குத் தங்கத்தால்