பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருத்தலப்பயணம் கோயில் மிகப் பெரியது. இக்கோயிலிலுள்ள ஆறுமுகக் கடவுளின் பெரிய திரு உருவம் மிக்க அழகுடையது. இத்தலத்திற்குப் புராணமும், காந்திமதியம்மனுக்கு அழகிய பிள்ளைத் தமிழும் இருக்கின்றன. சம்பந்தர் முந்திமா விலங்கல்அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே உந்திமா மலரடி ஒருவிரல் உகிர்நுதி யால்அடர்த்தார்: கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை. சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே-லிஉறை செல்வர்தாமே.