பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠28 திருத்தலப்பயணம் இத்தலத்தில் சித்திரை முதல் தேதி முதல் ஏழாம் நாள்வரை, சூரியன் உதிக்குங்கால் சூரிய ஒளி முதலில் சுவாமி மேலும் பிறகு தேவி மேலும் விழுகின்றதாம். சம்பந்தர் கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி அம்மலர்க் காந்த ளங்குறி பைய ராவிரி யும்புற வார்பனங் காட்டுர் மெய்ய ரிவைஓர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாள்தொறும் பொய்யி லாஅடி மையு ரிந்தார்க்குஅரு ளாயே. 236. திருஆமாத்துTர் அபிராமஈசர்-முத்தாம்பிகை சம்பந்தர் : 2 அப்பர் : 2 சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 8-9-57; 4-12-65. விழுப்புரம் இரயில் நிலையத்தினின்றும் வடமேற்கே 4 கல் தொலைவு. பம்பை என்னும் சிறிய ஆற்றின் வட கரையில் கோயில் இருக்கிறது. இரட்டையர்கள் இத்தலத்திற்குக் கலம்பகம் பாடியுள்ளார்கள். சம்பந்தர் கோண்நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள் பூண் ஆகம் பாகமாப் புல்கி அவளோடும் ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்துனர் அம்மானைக் காணாத கண்எல்லாம் காணாத கண்களே.