பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருத்தலப்பயணம் பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றாகிய பிருதுவி தலம் காஞ்சி என்று சிலரும் திருவாரூர் என்று வேறு சிலரும் கூறுவர். அம்பிகை இறைவனை வழிபட்டுத் தழுவிக்கொண்ட காரணத்தால் தழுவக் குழைந்தார் என்று இறைவனுக்கு ஒரு பெயர் உண்டு. ஐயடிகள் காடவர்கோன் அரசாண்ட தலம் இது. இத்தலத்தைத் தலை நகராகக்கொண்டு பல்லவ மன்னர் பலரும் ஆண்டிருக்கின்றனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள். இழந்த இடக்கண் பெற்ற பதி, திருக்குறிப்புத் தொண்ட நாயனார், பிறந்தருளிய தலம். சாக்கிய நாயனார் வீடுபேறடைந்த தலம், திருவாசகத்தில் காஞ்சியை 6 இடங்களில் குறிப்பிடுவார். வில்லிபுத்துர் ஆழ்வார் தல யாத்திரை வந்த பார்த்தன் காஞ்சிக்கு வந்ததைக் கூறுமிடத்து,காஞ்சிக் காமாட்சியை வாய் கொள்ளாமல் பாடி மகிழ்வார். மாதவச் சிவஞான யோகிகள் காஞ்சிக்கு ஒரு அரியபுராணம் பாடியுள்ளார். அப் புராணத்தில் வரும் நால்வர் வணக்கம் இணையற்றன. கந்தபுராணம் பாடிய கச்சியப்பச் சிவாச்சாரிய சுவாமிகள் காஞ்சி நகரத்தில் பிறந்தவர். சம்பந்தர் மழுவாளோடு எழில்கொள்து லப்படை வல்லார்தம் கெழுவாள்.ஒர் இமையார் உச் சிஉமை யாள்.நங்கை வழுவாமே மல்குசி ரால்வளர் ஏகம்பம் தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாமே. அப்பர் உமையவளை ஒருபாகம் சேர்த்தி னான்கண். உகந்துஒலிநீர்க் கங்கைசடை ஒழுக்கி னான்காண்; இமய வடகயிலைச் செல்வன் தான்காண்; இல்பலிக்குச் சென்றுஉழலும் நல்கூர்ந் தான்காண்; சமயம்அவை ஆறினுக்கும் தலைவன் தான்காண்; தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய இமையவன்காண் எழில்ஆரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.