பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருத்தலப்பயணம் அப்பர் மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப் படுவார் தாமே சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே, சரண்என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே சிலைமலையா மூஎயிலும் அட்டார் தாமே திருவாலங் காடுறையும் செல்வர் தாமே. சுந்தரர் பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் தன்னைப் போகாமே மெய்யே வந்துஇங்கு எனைஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே! பையாடு அரவம் அரைக்குஅசைத்த பரமா! பழைய னுர்மேய ஐயா! ஆலங் காடா!உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. காரைக்கால் அம்மையார் கொங்கை திரங்கி நரம்புஎழுந்து. குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப் பங்கி சிவந்து இரு பற்கள்.நீண்டு பரடுயர் நீள்கணைக் கால்ஒர்பெண்பேய் தங்கி அலறி உலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி. அங்கம் குளிர்ந்துஅனல் ஆடும்.எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே சேக்கிழார் "திருவாலங் காடுஉறையும் செல்வர்தாம்" எனச்சிறப்பின் ஒருவாத பெருந்திருத்தாண் டகம்முதலாம் ஓங்குதமிழ்ப் பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியும் மருவுஆர்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார்.