பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 251 256. திருக்காளத்தி (காளஹஸ்தி) காளத்திநாதர்-ஞானப்பூங்கோதை சம்பந்தர் : 2. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 18-11-61, 30-1-66. இரயில் நிலையம். பொன்முகலி ஆற்றின் கிழ்க்கரையில் காளத்திமலை அடிவாரத்தில் கோவில் இருக்கிறது. பெரிய கோவில், ஐந்து பூதத் தலங்களுள் இது காற்றுத்தலம். இறைவன் சன்னிதியில் ஒரு துரண்டா மணிவிளக்குக் காற்றில் அசைவதுபோல் அசைந்து ஆடி எரிந்துகொண்டிருக்கிறது. மேற்குப் பார்த்த சன்னிதி. கண்ணைப் பிடுங்கிக் கடவுளுக்குக் கொடுத்த செயற்கருஞ் செயல்புரிந்த கண்ணப்ப நாயனார் வழிபட்டு முத்தியடைந்த தலம் இது. கண்ணப்பர் திருவுருவம் சிலை வடிவத்தில் சிவபெருமான் திருமுன்னர் நிற்பதை இன்றும் காணலாம். காளத்தியப்பனை வணங்க வந்த ஞானசம்பந்தர், "கடவுளை வணங்கிய பயன் கண்ணப்பரை வணங்குதலே" என்று கருதினார் என, "வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன் கனபார் போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்" என்ற வரிகளால் சேக்கிழார் அருளுவார். நக்கிரதேவர் இத்தலத்தைவழிபட்டுச்சிறப்பெய்தினார். கைலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடினார். கருணைப்பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய உடன்பிறந்தவர்கள் இத்தலத்திற்கு பூரீகாளத்திப்புராணமும், வீரைநகர் ஆனந்தக் கூத்தர் திருக்காளத்திப் புராணமும், சேரைக் கவிராயர் திருக்காளத்தி உலாவும் பாடியுள்ளனர். பட்டினத்து அடிகள் கண்ணப்பரின் அருஞ்செயலைப்பெரிதும் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அப்பாடலைப் பாடல் பகுதியில் காண்க.