பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருத்தலப்பயணம் சிவலிங்கம் மிகச் சிறியது. ஒரு கொட்டைப் பாக்கு அளவில் தரைக்குள் ஆவுடையாருக்குள்ளே அடங்கியிருக்கிறது. ஆவுடையாருக்குள் விரலைவிட்டுத் தடவரினால்தான் சிவலிங்கத்தை அறிய முடியும். இங்குக் காசி நகரத்தில் போல் எல்லோரும் கடவுளைத் தொட்டு, நீராட்டி, மலரிட்டு வழிபடலாம். அப்பர் சுவாமிகள் "கோகர்ணம் சூழாக் கால்களால் பயன் என்?" என்று கேட்பார். பார்த்தன் தல யாத்திரை வரும்போது கோகன்னத்துக்கு வந்தான் என்ற நிகழ்ச்சியை வில்லிபுத்துர்ஆழ்வார் பின்வரும் பாடல் வரிகளால் கூறுவார். சிந்துதிரை நதிபலவும் சென்று தோய்ந்து, திங்களுடன் அரவுஉறவு செய்யும்வேணிக் கொந்துஅவிழும் மலர் இதழித் தொடையோன் வைகும் கொடிமதில்துழி கோகன்னம் குறுகி னானே. சம்பந்தர் நீறுதிரு மேனிமிசை ஆடிநிறை வார்கழல்சி லம்புஒ லிசெய, ஏறுவிளை யாடஇசை கொண்டுஇடுப -லிக்குவரும் ஈசன் இடமாம். ஆறுசம யங்களும்வசி ரும்பி அடி பேணிஅரன் ஆக மம்மிகக் கூறுமணம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோக ரணமே, அப்பர் கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால்விரலால் தோள்நெரிய ஊன்றி னான்காண்; மெய்யின் நரம்பிசையால் கேட்பித் தாற்கு மீண்டே அவற்கருள்கள் நல்கி, னான்காண்; பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்; போர்ப்படையான் காண்பொருவார் இல்லா தான்காண்; மைக்கொள் மணிமிடற்று வார்சடையான்காண்; மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.