பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 283 எய்ப்புஎன்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவனைப் பள்ளி யானே. ஆண்டாள் எழில்உடைய அம்மனைமீர்! என்அரங்கத்து இன்.அமுதர், குழல்அழகர் வாய்அழகர் கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகர் எம்மானார் என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே. குலசேகராழ்வார் மறம்திகழும் மனம்ஒழித்து. வஞ்சம் மாற்றி, ஐம்புலன்கள் அடக்கிஇடர்ப் பாரத் துன்பம் துறந்து.இருமுப் பொழுதுஏத்தி, எல்லை இல்லாத் தொல்நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான அறம்திகழும் மனத்தவர்தம் கதியை, பொன்னி அணிஅரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் நிறம்திகழும் மாயோனைக் கண்டுஎன் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே! திருமழிசையாழ்வார் அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான்-அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே, வெள்ளத்து அரவணையின் மேல். தொண்டர் அடிப்பொடியாழ்வார் தவத்துளார் தம்மில் அல்லேன் தனம்படைத் தாரில் அல்லேன் உவர்த்தநீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் அவத்தமே பிறவி தந்தாய். அரங்கமா நகரு வானே!