பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருத்தலப்பயணம் 7. புள்ளம்பூதங்குடி வல்வில்இராமன்-பொற்றாமரையாள் வழிபட்டநாள் : 1-2-57, 3-1-66. திருமங்கையாழ்வார் 10. சுவாமி மலைக்கு வடமேற்கே 2 கல் தொலைவு. கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்திற்கு மேற்கே ஒரு கல் தொலைவில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறந்தருளிய மண்டங்குடி இருக்கிறது. வடகிழக்கே % கல் தொலைவில் ஆதனூர் என்ற திவ்வியப் பிரபந்தத் தலம் இருக்கிறது. திருமங்கையாழ்வார் மேவா அரக்கர் தென்இலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து, மாவாய்ப் பிளந்து மல்அடர்த்து மருதம் சாய்த்த மாலதுஇடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகுஇரியும் பூவார் கழனி எழில்ஆரும் புள்ளம் பூதங் குடிதானே. 8. திருப்பேர்நகர் (கோவிலடி) அப்பக்குடத்தான்-கமலவல்லி வழிபட்டநாள் : 24-3-57, 2-1-66 1. பெரியாழ்வார் 2, 2. திருமழிசையாழ்வார் 1: 3. திருமங்கையாழ்வார் 19, 4.நம்மாழ்வார் 11. (ஆக 33) தஞ்சாவூருக்கு மேற்கே 1 கல் தொலைவிலுள்ள பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஐந்து கல் அளவில்