பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருத்தலப்பயணம் திருமங்கையாழ்வார் தம்பியொடு தாம்ஒருவர் தம்துணைவி காதல்துணை ஆக முனநாள் வெம்பினரி கானகம்உ லாவும்அவர் தாம்இனிது மேவு நகர்தான் கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயில் ஆலும்எழில் ஆர்பு றவுசேர் நம்பிஉறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே! 22. திருஇந்தளூர் (திருவழுந்துார்) மருவினியநாதன் சுகந்தவனநாதன் சந்திரசாபவிமோசனவல்லி வழிபட்டநாள் : 1-2-57, 19-10-65. திருமங்கையாழ்வார் : 11 மாயூரம் இரயில் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமங்கையாழ்வார் . ஆசை வழுவாது ஏத்தும் எமக்குஇங்கு இழுக்காய்த்து. அடியோர்க்குத் தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு. காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர். எம்பெருமான். வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம்நீரே!