பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருத்தலப்பயணம் 27. திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள்-அபிடேகவல்லி வழிபட்டதாள் : 2-9-57, 12-3-65. திருமங்கையாழ்வார் : 14 திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாரூரி ளிைன்றும் நான்கு கல் தொலைவில் இருக்கின்றது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமங்கையாழ்வார் மண்ணாடும், விண்ணாடும், வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி, உய்யக் கொண்ட கண்ணாளன். கண்னமங்கை நகராளன் கழல்துடி. அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனிய வாறே. இராமலிங்க சுவாமிகள் உலகம் புரக்கம் பெருமான்தன் உளத்தும், புயத்தும் அமர்ந்துஅருளி. உவகை அளிக்கும் பேரின்ப உருவே! எல்லாம் உடையாளே! திலகம் செறிவாள் துதலகரும்பே' தேனே! கனிந்த செழுங்கனியே! தெவிட்டாது அன்பர் உளத்துள்ளே தித்தித்து எழும்ஒர் தெள்ளமுதே!