பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. திருமாலிருஞ்சோலைமலை (அழகர் கோயில்) மாலலங்காரர் அழகர்-சுந்தரவல்லி வழிபட்டநாள் : 2-9-58, 24-8-65 1. பெரியாழ்வார் 34 ஆண்டாள் 11, 3. திருமங்கையாழ்வார் 33, 4. பூதத்தாழ்வார் 3: 5. பேயாழ்வார் 1, 5. நம்மாழ்வார் 46. (ஆக 128) இத்தலம் மதுரையினின்றும் வட கிழக்கே 12 கல் தொலைவு. கோவில் மலைஅடிவாரத்தில் இருக்கிறது. நின்றதிருக்கோலம் கிழக்கேதிருமுகமண்டலம், மலையின் மீது சிலம்பாறு என்னும் நூபுர கங்கை மூன்று மைலில் இருக்கிறது. தூய்மையான நீர். அந்நீரைக் குழாய் மூலம் கிழே கொண்டு வந்திருக்கிறார்கள். சித்திரை மாதத்தில் பூரணை நாளன்று தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் மதுரைக்குச் செல்லும் வழியில் பற்பல மண்டபங்களில் தங்கி, அழகர் வையை ஆற்றில் இறங்கும்காட்சி பெரும் சிறப்புடையது. இவ்விழாவுக்குமதுரை நகரமே திரண்டு வந்துவிடும், இத்தலத்தின் கோபுர வாயிலில் உயரமான இடத்தில் பதினெட்டாம்படிக் கறுப்பர் சந்நிதி இருக்கிறது. இத்தலத்தை ஆறுபடை வீடனுள் ஒன்றென்று கூறுப. பழமுதிர்சோலை இஃது என்ப. முருகன் கோயிலைத் திருமால் கோயிலாக மாற்றப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.