பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 திருத்தலப்பயணம் நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து நாம்களித்து உளநலம் கூர. இம்மட உலகர் காணநீ ஒருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 52. திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன்-குழைக்காதுவல்லி வழிபட்டநாள் : 10-8-59, 5-9-65. நம்மாழ்வார் 12. இத்தலம் நெல்லை-செந்தூர்ச்சாலையில் இருக்கின்றது. ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கல் தொலைவு. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். கோயில் பெரியது. நவ திருப்பதிகளுள் இது ஐந்தாவது. இத்தலம் தண்பொருநை ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. நம்மாழ்வார் செங்கனி வாயின் திறத்த தாயும். செஞ்சுடர் நீள்முடித் தாழ்ந்த தாயும், சங்கொடு சக்கரம் கண்டுஉ கந்தும், தாமரைக் கண்களுக்கு அற்றுத்திர்ந்தும், திங்களும் நாளும் விழாஅ றாத தென்திருப் பேரையில் வீற்றுஇ ருந்த நங்கள் பிரானுக்குஎன் நெஞ்சம் தோழி! நானும் நிறையும் இழந்த துவ்வே.