பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. திருஅனந்தபுரம் (அனந்தசயனம்) அனந்தபத்மநாபன்-பூரீஹரிலட்சுமி வழிபட்டதாள் : -8-59, 3-4-55, நம்மாழ்வார் 11. இரயில் நிலையம். கடற்கரை, மலைநாட்டின் தலைநகரம். பள்ளிகொண்ட பெரிய பெருமாள். மூன்று சன்னிதிகள் இருக்கின்றன. மூன்று சன்னிதியின் அளவுக்கு நீளப் பள்ளி கொண்டிருக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம், கோயில் மிகப் பெரியது. நடு ஊருக்குள் இருக்கின்றது. நம்மாழ்வார் புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள் துளவி எண்ணுமின் எந்தைநாமம் இப்பிறப்பு அறுக்கும்.அப்பால் திண்ணம்நாமி அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர்ஆவார். 60. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) திருவாழ்மார்பன்-கமலவல்லி வழிபட்டநாள் : 9-8-59, 1-4-65. நம்மாழ்வார் 1. இத்தலம் நாகர் கோயிலை ஒட்டி இரண்டு கல் தொலைவில் இருக்கிறது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இக்கோயிலில் நம்மாழ்வாருக்குச் சன்னிதி இருக்கிறது.