பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. திருஅயிந்திரபுரம் தெய்வநாயகப்பெருமாள்-வைகுண்டநாயகி வழிபட்டநாள் : 5-7-57, 3-12-65. திருமங்கையாழ்வார் 20 திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 3 கல் தொலைவு. கெடில நதிக்கு அணித்தே ஓர் மலைத்தொடரின் கீழ்கோவிலிருக்கிறது. கோயில் பெரியது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். பார்த்தன் தல யாத்திரை வந்த பொழுது "நேமிக்கையாளன் அயிந்திரபுரமும் கண்டு கைதொழுதான்" எனப் பார்த்தன் இப்பதியை வணங்கியதாக, வில்லிபுத்துனர் ஆழ்வார் பாடியுள்ளார். நடுநாட்டில் திவ்வியப் பிரபந்தம் பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று இத்தலம். மற்றொன்று திருக்கோவலூர். திருமங்கையாழ்வார் வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநா யகன்இடம் மெய்தகு வரைச்சாரல் மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை.அம் கொடியாட செய்ய தாமரைச் செழும்பனை திகழ்தரு திருவயிந் திரபுரமே.