பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 363 80. நிலாத்திங்கள் துண்டம் நிலாத்திங்கள் துண்டத்தான் நேரொருவரில்லாவல்லி வழிபட்டநாள் : 11-9-57, 23-1-66. திருமங்கையாழ்வார் : ! இது பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது. நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். இச்சந்நிதி ஏகாம்பர நாதர் கோயிலுக்குள் முதல் பிரகாரத்தில் இருக்கிறது. திருமங்கையாழ்வார் (திருநீரகம் தலப் பாடல் பார்க்க) 81. ஊரகம் (உலகளந்தபெருமாள் கோயில்) உலகளந்த பெருமாள்-அமுதவல்லி வழிபட்டநாள் : 11-9-57, 23-1-66. 1. திருமழிசையாழ்வார் 2 திருமங்கையாழ்வார் 4:(ஆக 6) இது பெரிய காஞ்சியில் உள்ளது. இக்கோயிலுக்குள் ஊரகம் தவிர, நீரகம், காரகம், கார்வானம் என்ற மேலும் மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. உலகளந்த பெருமாள் நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். பெரிய திருவுருவம். திருக்கோவலூர் உலகளந்த பெரும்ாளைவிட இவர் பெரிய வடிவினர். மேல் எடுத்த திருவடியைப் பந்தம் உயர்த்தித்தான் காணவேணும்.