பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 திருத்தலப்பயணம் தொலைவில் உள்ளது. இத்தலம் சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையின்மேல் இருக்கிறது. பெரிய கோயில், கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். எவ்வளூர் வீரராகவப் பெருமாளை, வடலூர் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் பாடியுள்ளார். திருமழிசையாழ்வார் (அன்பில் தல்ப்பாடல் பார்க்க) திருமங்கையாழ்வார் முனிவன். மூர்த்தி, மூவராகி வேதம் விரித்துஉரைத்த புனிதன். பூவை வண்ணன்.அண்ணல் புண்ணியன். விண்ணவர்கோன் தனியன், சேயன்.தான்ஒருவன் ஆகிலும் தன்அடியார்க்கு இனியன். எந்தை, எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. இராமலிங்க சுவாமிகள் இளங்கொடி தனைக்கொண்டு ஏகும் இராவணன் தனைஅ ழித்தே களங்கம்இல் விபீட ணர்க்குக் கனஅரசு அளித்தாய் போற்றி! துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி! விளங்குநல் எவ்வு ளுர்வாழ் வீரரா கவனே போற்றி!