பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 381 பேயாழ்வார் தாழ்சடையும், நீள்முடியும். ஒண்மழுவும். சக்கரமும், சூழ்அரவும், பொன்நானும் தோன்றுமால்-சூழும் திரண்டு.அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து. நம்மாழ்வார் சொன்னால் விரோதம்இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்.நாவில் இன்கவி யான்ஒரு வர்க்கும் கொடுக்கிலேன் தென்னா தெனாளன்று வண்டு முரல்திரு வேங்கடத்து என்னானை என்.அப்பன் எம்பெரு மான் உளன் ஆகவே. கம்பர் வடசொற்கும். தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும். மற்றை நூலும் இடைசொற்ற பொருட்குஎல்லாம் எல்லையதாய் நல்அறத்துக்கு ஈறாய். வேறு புடைசுற்றும் துணைஇன்றி. புகழ்பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற அடைகற்றும் தண்சாரல் ஓங்கியவேங் கடத்தில் சென்று அடைதிர் மாதோ. பெருந்தேவனார் தேன்.ஒங்கு சோலைத் திருவேங் கடம்என்றும், வான்.ஒங்கு சோலை மலைஎன்றும்-தான்.ஒங்கு தென்அரங்கம் என்றும் திருஅத்தி ஊரென்றும், சொன்னவர்க்கும் உண்டோ துயர். வில்லிபுத்துனர் ஆழ்வார் பத்திக்குவ ரம்பாகிய பார்த்தன் பலதிர்த்தம், அத்திக்கினும் எத்திக்கினும் ஆம்என்றுஅவை ஆடி, சித்திக்குஒரு விதைஆகிய தென்நாட்டினை அணுகி. தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.