பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108. பரமபதம் பரமபதநாதன்-பெரியபிராட்டியார் வழிபட்டநாள் : 1. பெரியாழ்வார் 4, 2 ஆண்டான் 1. 3. திருமழிசையாழ்வார் 2, 4. திருப்பாணாழ்வார் 1, 5. திருமங்கையாழ்வார் 1, 6. பொய்கையாழ்வார் ே 7. பேயாழ்வார் 1, 8. நம்மாழ்வார் 24 (ஆக 36) இது இன்ன இடம் என்று தம்மால் காண முடியாதது. இதற்கு வழி நாம் எப்படிச் சொல்வது? மன.மொழி,மெய்களுக்கு எட்டா,எல்லாம் கடந்த ஒரு பொருள் இருக்கும் இடம் பரமபதம். பெரியாழ்வார் தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடும் கொடிபோல். சுடர்ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும்என் சோதிநம்பீ! வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே. ஆண்டாள் து.ாமணி மாடத்துச் சுற்றும் விளக்குனரிய, தூமம் கமழத் துயில்அணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்: மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்