பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ திருத்தலப்பயணம் 34. கடம்பூர் (மேலைக்கடம்பூர்) அமிர்தகடேசுரர்-சோ திமின்னம்மை சம்பந்தர் : t; அப்பர் : 2. வழிபட்ட நான் : 22-12-56; 4-1-66, சிதம்பரத்திற்கு 15 மைல் தொலைவிலுள்ள காட்டு மன்னார்குடியில் இருந்து மேற்கே எய்யலுனர் செல்லும் வழியில் 3 மைலில் இத் தலம் உள்ளது. இங்குள்ள கோயிலுக்குக் கரக்கோயில் என்று பெயர். இதன் கிழக்கே மைலில் கடம்பூரிளங்கோயில் உள்ளது. சம்பந்தர் திவிரி, யக்கழல் ஆர்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்; காவிரி கொன்றை கலந்த கண்துத லான்கடம் பூரில் பாவிரி பாடல் பaரில்வார் பழியொடு பாவம் இலாரே. அப்பர் நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்; தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்: தன்க டன் அடி யேனையும் தாங்குதல், என்க டன்பணி செய்து கிடப்பதே. மணிவாசகர் கடம்பூர் மேவிய விடங்கா! போற்றி!