பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಜ್ಯ அவர்களும் யாத்திரையில் பங்குகொள்ள இசைந்தனர் என் தமையனார் மகன் திரு. க.வெ. ராம. இராமசாமி. செட்டியார் அவர்களும் கலந்துகொள்வதாகக் கூறினார்கள். இவ்வாறு என் திட்டம் ஆக்கம் பெற வழிபிறந்தது. இத்தனை பேரும், வேலையாட்களுடன் தேவார-பிரபந்தப் பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்று வணங்கி வர, காரில் செல்வது தான் வசதி என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக, சுமார் பத்துப் பேர்கள் போகவும், இரவில் படுத்துக்கொள்ளவும் கூடிய வகையில், சிறியதொரு வீட்டின் வசதியுடன் கட்டப்பட்ட 'காரவான்' என்னும் பெரிய கார் ஒன்ன்ற வாங்கினேன். அக்காரின் அமைப்பை இந்நூலில் வெளியிடப்பட்டுள்ள புகைப் படங்களில் காணலாம். தரிசிக்கவேண்டிய தேவார-பிரபந்தத் தலங்களின் எண்ணிக் கையையும், பரந்துகிடக்கும் தன்மையையும் எண்ணி, எவ்விதம் பிரயாணம் செய்தால், குறுகிய கால அளவில் கூடுதலான கோயில்களைக் கண்டு தொழலாம் என, ஒவ்வொரு பிரயாணத்தொடக்கத்திலும் முன்திட்டம்போட்டோம். எங்கள் திருத்தலப் பயணம் 28-1-65 அன்று தொடங்கியது. 19-3-66 அன்று முடிவு பெற்றது. நாங்கள் தல யாத்திரையை குறுகிய கால அளவில் மனநிறைவோடு முடித்தோம். இந்தக் கிடைத்தற் கரிய நற்பயணத்தை இவ்வளவு விரைவாகச் செய்து, நன்கு முடிக்க அருள் பாலித்த, எங்கள் அரியக்குடிப் பெருமாளுக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன். நாங்கள் தரிசித்த தேவாரத் தலங்கள் 269. திவ்வியப் பிரபந்தத் தலங்கள் 97. இவைதவிர ஆங்காங்கே உள்ள பிற தலங்களையும் கண்டு வணங்கினோம். அவை 90. ஆக, நாங்கள் ஓர் ஆண்டு, ஒரு மாதம், 22 நாட்களில் ஏனைய அலுவல்கட்கிடையில், தரிசித்த தலங்கள் 456 ஆகும். ஆலயங்களில் எழுந்தருளிய மூர்த்திகளின், ஆலயங்களின், அருமை, பெருமைகளையும், பாடற் சிறப்பினையும், தமிழ்க் கடலார் அவர்களும், முத்த வெ. சொ. அவர்களும் அவ்வப் போது எடுத்துக் கூறி விளக்கினர். அத்தோடு அந்தந்தத் தலத்திற்கான பாடல்களைப் பாடியும், பாடச் செய்தும் இன்புற வைத்ததை ஒருபோதும் மறக்க முடியாது. ஒவ்வொரு தலத்திலும், அத்தலத்திற்குரிய பாடல் முழுமையும் படித்து வழிபாடு செய்தோம். தேவார முழுமையும் ஒதப்பட்டது . தலம் பற்றிய பிரபந்தப் பாடல்கள் முழுமையும் வாசித்தோம். மணிவாசகரை ஆண்டவன் ஆட்கொண்ட திருப்பெருந்துறை யினைத் தரிசித்து யாத்திரையைத் தொடங்கினோம். பயணம் கிட்டத்தட்ட முடிந்தபோது அத்தலத்தை வணங்கி, திருப்பெருந்