பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 திருத்தலப்பயணம் 56. திருக்கானுரர் கெம்மேனிநாதர்-சிவயோகநாயகி கரும்பீசர்-செளந்தரநாயகி. சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 24-3-57, 2-1-66. பூதலூர் இரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 5 மைலில் உள்ள மேலைத் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து அங்கிருந்து வடக்கே.2 மைல் சென்றால் இத் தலத்தை அடையலாம். இத் தலம் கொள்ளிடக்கரையில் இருக்கின்றது. ஊர் எதுவுமில்லை. கோவில் மட்டுமே மணல் திட்டுக்கு நடுவில் இருக்கின்றது. திருவையாற்றில் இருந்து காரில் கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் வழி மேலைத் திருக்காட்டுப் பள்ளியை அடைந்து இத் தலத்தை அணுகுதல் எளிது. சம்பந்தர் தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணின் நல்ல முழுவ மொத்தைகமல்குடிாடல் செய்கையிடம் ஒவார் குமிழின் மேனி தந்துகோல நீர்மையது கொண்டார். கமழும் சோலைக் கானுர்மேய பவளவண்ண னாரே. அப்பர் தாயத் தார்.தமர் நல்நிதி என்னும்இம் மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்; காயத் தேஉளன் கானுர் முளையினை வாயத் தால்வணங் கிர்வினை மாயவே.