பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 1

திரத்திலே சிவபாதவிருதயர் என்பார் செய்த தவப் பயனுக அவர்தம் மனைவியார் பகவதியார் திரு. வயிற்றில் ஆண்மகவு பிறந்தது. வேத நெறி தழைத் தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றிய அக் குழந்தை மூன்ரும் வயதில் தம் தந்தையாருடன் சீர்காழிக்கோயிலுக்குச் சென்றது. தந்தையார் பிரம தீர்த்தக் கரையில் அக்குழந்தையை அமரச்செய்து தாம் குளத்தில் மூழ்கி நீராடினர். அவர் நீருள் மூழ்கி மந்திரம் ஒதும் நிலேயில் தந்தையைக் காணுத அக்குழந்தை திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து 'அம்மே அப்பா என்று கூவியழுதது. அந்நிலையில் தோணிபுரத்து இறைவர் உமையம்மையுடன் விடை மேல் எழுந்தருளிப் பிரமதீர்த்தக் கரையினையடைந்து உமாதேவியாரை நோக்கி, அழுகின்ற பிள்ளைக்கு முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டுக’ எனப் பணித் தருளினர். உமையம்மையாரும் சிவஞானமாகிய இனிய அமிழ்தத்தை பாலிற்குழைத்துப் பிள்ளையார் கையிற். கொடுத்து அழுகையைத் தீர்த்துப் பாலடி சிலை ஊட்டி யருளினர். இங்ங்ணம் பிள்ளைமைப் பருவத்திலேயே அம்மையப்பரால் ஆட்கொள்ளப்பெற்றமையால் ஆளுடைய பிள்ளையார் எனவும் திருஞானசம்பந்தர் எனவும் போற்றப் பெற்ருர்.

நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறிய சிவபாத விருதயர் பால் வடியும் வாயினராய் நின்றபிள்ளையை நோக்கி யார் கொடுத்த பாலையுண்டாய்? எச்சில் கலக்க இதனை அளித்தாரைக் காட்டு க’ என்று சிறிய கோலொன்றை எடுத்து அடிப்பதற்கு ஓங்கினர். அப் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார் *தோடுடைய செவியன் என்னும் திருப்பதிகத்தினைப் பாடி எம்ம்ை இதுசெய்த பிரான் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனே எனத் தம் தந்தையார்க்குச் சுட்டிக் காட்டினர். தந்தை